Saturday, February 11, 2012

புலிகள் என்னை கட்டாயமாக கூட்டிச் சென்றாலும் எனது குடும்பத்துக்கு 8,000 ரூபா கொடுத்தனர் !

2007ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொண்டுசெல்லப்பட்டு, அவர்களின் நிர்வாகப் பிரிவில் பலவந்தமாக பணிக்கமர்த்தப்பட்டிருந்த யுவதி ஒருவருக்கு அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முயற்சியினால் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் வேலை வாய்ப்பு வழங்ககப்பட்டுள்ளதாம். சிறிதரன் சுகிர்தா (24 வயது) என்ற மேற்படி பெண்ணுக்கு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வின் போது நியமனக்கடிதத்தை நாமல் ராஜபக்ஷ எம்.பி வழங்கியுள்ளார்.

தனது தந்தையும், அண்ணாவும் புலிகளின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றினர். நான் எவ்வித அச்சமும் இன்றி படித்துக் கொண்டிருந்த போது அவர்கள் என்னைப் பலவந்தமாக பிடித்துச் சென்னர். இருப்பினும் புலிகள் மாதச்சம்பளமாக 8,000 ரூபாவை எமது குடும்பத்துக்கு கொடுத்துவந்தர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது படையணிக்கு பலவந்தமாக ஆட்களைச் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக இருக்கும் இவ்வேளையில், புலிகள் தமது நிர்வாகசேவை மற்றும் ஆயுதம் ஏந்திப் போராடாமல் இருக்கும் சேவைகளுக்காவே பலரை பிடித்துச் சென்றனர் என்ற உண்மையை இப் பெண் தற்போது கூறியுள்ளார்.

1 comment:

  1. அட எதற்காக அலரிமாளிகைக்கு அழைத்து நியமனக் கடிதம் கொடுக்க வேண்டும்? அசிங்க பிரச்சாரங்களுக்கா? என்ன தான் ஆடினாலும் இனி தப்ப முடியாது கண்ணுகளா.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.