Wednesday, February 22, 2012

சர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும்! 26வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரான்சு தேசத்தில், தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என முழங்கியவாறு ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நடைப்பயணம் 26வது நாளாக உறுதியுடன் நடைபோடுகின்றது.
கடந்த சனவரி மாதம் 28ம் நாள், இலண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், 725 கிலோ மீற்றர்களைக் கடந்து உறுதியுடன் வீறுநடை போட்டுக் கொண்டுள்ளது.

கடந்த சனவரி 28ம் நாள் லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற பெப் 27ம் நாளில் நா.த.அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மக்கள் எழுச்சிப் போராட்ட நிகழ்வில் நிறைவு செய்யவுள்ளது.

லண்டனில் இருந்து கடந்த சனவரி மாதம் 28ம் நாள் தொடங்கிய இந்த நடைப்பயணம் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளான 27ம் நாள் திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையவுள்ளது.

சுவிஸ் எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நடைப்பயணம் தற்போது பிரான்சில் Les Marais எனும் இடத்தில் சென்று கொண்டுள்ளது.
தமிழர் மீதான சிறிலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை தமிழீத்தில் மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் நோக்கில், தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு சர்வதேசம் முனைந்துள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளான பெப்ரவரி 27ம் நாள், தமிழர்கள் அனைவரும் ஐ.நா முன்றிலில் அணிதிரண்டு, சர்வதேச சுயாதீன விசாரணை எனும் ஒற்றைக் கோரிக்கையை, ஒன்றுபட்ட குரலாக அனைவரும் ஒங்கி ஒலிப்போம் என, இந்த நடைப்பயணம் அறைகூவல் விடுத்து நிற்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.