Friday, January 27, 2012

அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்டு மீது தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா நகரில் நேற்று தேசிய நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள ஒரு விடுதியில் நடந்த விழாவில் பிரதமர் ஜுலியா கில்லார்டு எதிர்க்கட்சி தலைவர் டோனி அல்போட் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் பழங்குடி அமைப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் விழா நடந்த விடுதியினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை வெடித்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதிமீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின. பின்னர் விடுதிக்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றனர். அதைத் தொடர்ந்து மிகப்பெரிய விபரீதம் நடைபெற போவதை அறிந்த போலீசார் பிரதமர் கில்லார்டு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் டோனி அப்போட் ஆகியோரை விடுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.


இருந்தும் போராட்டக்காரர்கள் விடவில்லை. பிரதமர் கில்லார்ட் மீது கற்களை வீசி தாக்கினர். அப்போது அவரை பாதுகாப்பு அதிகாரி மனித கேடயம் போன்று சுற்றி நின்றபடி காருக்கு இழுத்து வந்து காப்பாற்றினார். அதேபோன்று எதிர்க் கட்சி தலைவரும் காப்பாற்றப்பட்டார். இவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசாரும் பலத்த பாதுகாப்பு கொடுத்தனர்.நட்சத்திரவிடுதியில் இருந்து தப்பி வெளியே வந்த கில்லார்ட் கால் தவறி கீழே விழுந்தார். அப்போது அவரது காலணிகள் கழன்றன. அவற்றை சுமந்து வந்த போலீசார் காரில் ஏறியதும் அவரிடம் வழங்கினர்.


இச்சம்பவம் கான்பரா நகரில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.கடந்த 1788-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அன்று ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து தனது காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியது. அதைதான் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக கொண்டாப்படுகிறது.இதற்கு ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தேசிய நாள் அல்ல. ஆஸ்திரேலியா மீது இங்கிலாந்து படையெடுத்து வந்து ஆக்கிரமிப்பு செய்த நாள். எங்களுக்கு உரிய மரியாதையும்இ உரிமையும் வழங்க வேண்டும். அதற்காக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என பழங்குடியின தலைவர் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.