Friday, January 13, 2012

புலம்பெயர் தமிழர்களின் சவால்களை எதிர்நோக்கத் தயார் – கோட்டாபய

புலம்பெயர் தமிழர்களின் சவால்களை எதிர்நோக்கத் தயார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


'இலங்கை தேசியப் பாதுகாப்பின் எதிர்கால சவால்கள்' என்ற தொனிப்பொருளில், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பாதுகாப்புச் செயலாளர் விசேட உரையாற்றிய போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.


அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த ஒஸாமா பின்லேடனை கொலை செய்ய வேண்டுமென அந்த நாடு கருதியது. அதேபோன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த வேலுபிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை முறியடித்தமை தவறாகாது என அவர் தெரிவித்தார்.


ஆசிய பிராந்திய வலயத்தின் சிறிய நாடு என்ற காரணத்தினால் இவ்வாறு இலங்கை மீதுகுற்றம் சுமத்தப்படுகின்றது.


நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு பல்வேறு சக்திகள் முயற்சித்து வருகின்றன. தற்போது பல்கலைக்கழக மாணவர்களையும் இந்த முயற்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்கள்.


போராட்டங்கள் என்ற போர்வையில் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது.


மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.


அரசாங்கத்தை மாற்றுவதற்கு தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களின் மூலம் அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியாது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.