Friday, December 30, 2011

கீரிமலை செம்மண்காடு மயானத்திற்குச் செல்வதற்கு கடற்படையினர் மீண்டும் அனுமதி மறுப்பு!

கீரிமலை செம்மண்காடு மயானத்திற்குச் கடற்கரையால் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாதையில் முட்கம்பிகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளது.கடந்த புதன்கிழமை வலி வடக்கைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்ததையடுத்து குறித்த சடலத்தை கீரிமலை செம்மண்காடு மயாணத்தில் தகனம் செய்வதற்கு கடற்படையினரிடம் அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்றுப் பின்னர், செம்மண்காட்டிற்குச்செல்லும் பாதையைத் தவிர்த்து, கடற்கரையோரமாக சடலத்தைக் கொண்டு செல்வதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கினர்.

இத்தகைய நிகழ்வின்போது வலி வடக்கு பிரதேசசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டமையினால் அரசியல் பழிவாங்கும் நிகழ்வாக குறித்த மயானத்திற்கு மக்கள் செல்வதை கடற்படையினர் மீண்டும் மறுத்துள்ளனர். இதேவேளை இன்று சனிக்கிழமை குறித்த மயானத்தை பிரதேசசபை சிரமதானம் செய்வதற்கு, அங்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 21 வருடங்களுக்குப் பின் முதலாவது சடலம் அண்மையில் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.