சர்வதேச அழுத்தங்களை குறைத்துக் கொள்வதற்கும், சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில், போர்க்குற்றம் இழைத்தோருக்கு தண்டனை உறுதி எனத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவின் கருத்துக்கு பேரினவாத சக்திகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் பேரினவாதச் சக்திகள் வீதியில் இறங்கி மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.
படைத்தரப்பினர் எதிர்நோக்கவுள்ள ஆபத்துக் குறித்து அறிந்து வைத்துள்ள அந்த இனவாத அமைச்சர்கள், தங்களது மதத் தலைவர்கள், கடும்போக்குடைய சிங்கள அமைப்புகள் உட்பட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு இதுவிடயம் தொடர்பில் விரிவான விளக்கமொன்றை அளிக்கவும் முடிவுசெய்துள்ளனர் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கருத்து வெளிட்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாகக் கூறினார்.
அதுமட்டுமின்றி, மஹிந்த ராஜபக்ச இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியின்போது, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் நடவடிக்கை உறுதி என்ற விடயத்தை தெரிவித்திருந்தார்.
சிறீலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பானது வெள்ளைக் கொடி விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சரத்பொன்சேகாவை மையப்படுத்தியதாக இருக்கலாம் என தெரியவருவிறது.
அரசாங்கத்தை ஆட்சி கவிழ்ப்பதற்காக முன்னாள் படைத்தளபதி படைச் சிப்பாய்களை திரட்டிப் பயன்படுத்தியதாக மஹிந்த அரசாங்கம் குற்றஞ்சாட்டியது. இதனடிப்படையில், படைகளின் உயர் அதிகாரிகள் உட்பட சிலரைக் கைது செய்து படைகளின் நீதிமன்றில் மூலம் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக தண்டனைப் பெற்ற படைச்சிப்பாய்களை போர்க்குற்றவாளிகள் என சித்தரிக்க சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருக்காலாம். இதற்கு முன்னர் தமது படைகள் பொதுமக்களுக்கு பூச்சிய இழப்புக்களை ஏற்படுத்தியவாறு போரில் ஈடுபட்டதாக பாதுகாப்புச் செயலர் உட்பட அனைத்துத் தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.ஆனால், தற்போது திடீரென போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், போர்க்குற்றச் செயல்களை மேற்கொண்ட படைகள் தண்டிக்கப்படுவதுடன், அதற்குப் பொருப்பாளவர்களும் தண்டிக்கப்பட வேண்டும், அத்துடன் பாதிக்கப்பட மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் மற்றும் மனிதாபிமான நாடுகள் மிகவும் அவதானமாக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி அதன் முக்கிய அம்சங்கள் கசிய ஆரம்பித்துள்ள நிலையில், கொழும்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்கள் குறித்து இரகசியப் பேச்சுகளும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.