வடக்கு கிழக்கில் அனைத்துக் காணி உரிமையாளர்களையும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள சிறிலங்கா அரசாங்கம் பதிவு செய்யப்படாத காணிகளை அரசுடமையாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தந்த பிரதேச செயலகங்களில் இதற்கென விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை பெற்று கிராம அதிகாரியின் பரிந்துரையுடன் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு காணி உரிமையாளர்கள் சிறிலங்கா அரசினால் கேட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது காணிகள் தொடர்பான பதிவுகளை இணையத்தளம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவித்தல் அடுத்தவாரம் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படவுள்ளது.
பதிவு செய்யப்படாத காணி உரிமங்களை ரத்துச் செய்வதற்கு திட்டமிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் அவற்றை அரசுடமையாக்கி குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் காணிகளைச் சுவீகரிக்கவே சிறிலங்கா அரசாங்கம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.