இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் பாரிய பங்கு இருப்பதாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான கலைராஜன் தெரிவித்தார்.
எனவே கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளி தான் என தமிழக சட்டசபையில் நேற்று உரையாற்றிய கலைராஜன் தெரிவித்தார். இலங்கைத் தமிழ் மக்களின் நலன் காக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அவர்களுக்காக பாடுபடுவதுபோல் நாடகம் நடத்தினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் வீட்டிற்கு மகள் கனிமொழியை அனுப்பி, பரிசுப் பொருள்களை வாங்கிவரச் செய்து மகிழ்ந்தவர் தான் கருணாநிதி என அவர் சாடியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதில், இலங்கை தலைவர்கள் மாத்திரமன்றி கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளி தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி மூன்றுமணி நேரம் நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க உண்ணாவிரதப் போராட்டத்தை இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறி நிறுத்தினார்.
இலங்கை போர் நிறுத்தத்தை அறிவித்ததாகவும் கூறினார். கருணாநிதி இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறி அரை மணிநேரத்திலேயே தமிழ் மக்கள் தங்கியிருந்த பாதுகாப்பு வலயங்களின் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்ததே என கலைராஜன் வரலாற்றை நினைவுபடுத்தியுள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.