சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சண்டேலீடர் செய்தித்தாளின் தலைவர் லால் விக்கிரமதுங்கவுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் செயற்பாடுகளுக்காக சீனா பணம் வழங்கியதாக சண்டே லீடரில் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டதை அடுத்தே இந்த அச்சுறுத்தல் கடந்த ஜூலை 19 ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டார் என்பது தமக்கு அதிர்ச்சியை தருவதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறித்த கட்டுரை தொடர்பாக விளக்கம் இருக்குமாயின் ஜனாதிபதி செய்தித்தாளுடன் பேசி தமது கருத்தை அதில் பிரசுரித்திருக்கலாம்.
இதனைவிடுத்து ஊடக தலைவரை அவர் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தியமையை எவ்வாறு ஜனநாயக செயற்பாடு என்று கூறுவது என்று உலக ஊடக அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு நாட்டின் தலைவர் முன்மாதிரியாக செயற்படவேண்டும். இதனை விடுத்து ஊடகத்துக்கு எதிராக செயற்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே அவர் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவது இது முதல் தடவையல்ல. எனவே ஊடகங்களுக்கு எதிரான போக்கை கைவிடவேண்டும் என்று ஊடக அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
அதேநேரம் இலங்கையின் ஊடக அமைப்புக்களும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும் என்றும் எல்லைகளற்ற ஊடக அமைப்பு கோரியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சண்டே லீடர் செய்தித்தாளின் தலைவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவேளையில்,
'நீங்கள் பொய் எழுதுகிறீர்கள்.அப்பட்டமான பொய்யை எழுதுகிறீர்கள். நீங்கள் என்னை அரசியல் ரீதியாக தாக்கலாம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் தாக்கமுடியாது. எனக்கு தெரியும் உங்களை தனிப்பட்ட ரீதியில் எவ்வாறு தாக்குவது என்று"
இவ்வாறு அச்சுறுத்தியதாக எல்லைகளற்ற ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சீனா, ஜனாதிபதிக்கும் அவரது மகனுக்கும் 9 மில்லியன் டொலர்களை வழங்கியதாக சண்டே லீடர் இரண்டு நாட்கள் கட்டுரை ஒன்றை பிரசுரித்தது.
இது தொடர்பில் விளக்கத்தைக் கோர, சண்டே லீடர், ஜனாதிபதி தரப்பை அணுகியபோதும் யாரும் அதற்கு பதில் தரவில்லை.
எனவேதான் ஒரு பக்க செய்தியை மாத்திரம் அந்த செய்தித்தாள் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.