வடக்கு கிழக்கில் 59,500 கணவனை இழந்த பெண்கள் வாழ்ந்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 42,565 பெண்களும், வடக்கு மாகாணத்தில் 16,936 பெண்களும் கணவரை இழந்து வாழ்வதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் தவிர்ந்த ஏனைய காரணிகளினாலும் இவர்கள் கணவரை இழந்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி, சமூக சேவைகள், மீள்குடியேற்றம் போன்ற அமைச்சுக்களினால் குறித்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்தத்தில் கணவரை இழந்த பெண்களின் நலனை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.