மண்டைதீவு அஞ்சல் அலுவலகத்திலிருந்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் இனந்தெரியாதவர்களால் திருடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இந்த உள்ளூராட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று பாரிய மோசடி வேலைகளில் அரச தரப்பினர் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
தமது வாக்காளர் அட்டைகளை பொதுமக்கள் பெறுவதற்கான மண்டைதீவு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்றபோது அவர்களிடம் கையொப்பம் வாங்கிய சிலர் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுச் சென்றதாக தபாலதிபர் கூறியுள்ளார்.
அவ்வாறு வாக்காளர் அட்டைகளைப் பெற்றுச் சென்றவர்கள் யார் என்பதைத் தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார்.
எனவே, தேர்தலின்போது தீவுப்பகுதியில் அரச தரப்பினர் பாரிய மோசடி வேலைகளில் ஈடுபடவுள்ளனரென்று தெரியவருகின்றது. மக்கள் விழிப்பாகவும் அச்சமின்றியும் தமது வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்குவதோடு மோசடிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.