இலங்கை வந்துள்ள இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழுவினர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸை இன்று மாலை சந்தித்துள்ளனர்.இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.
இன்று பகல் நாட்டிற்கு வருகை தந்த இந்த தூதுக் குழுவில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் மற்றும் அந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்குகின்றனர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.