2ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, தாக்கல் செய்த பிணை மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று(08.06.2011) நிராகரித்துள்ளது. 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பிணை மனுக்களையும் நீதிமன்றம் மே 20ஆம் திகதி நிராகரித்தது ஏற்கனவே அறிந்ததே. அதை எதிர்த்து கனிமொழியும், சரத்குமாரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களின் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மே 30ஆம் தேதி முடிவடைந்தது. விவாதம் முடிவடைந்த நிலையில் அவர்களின் பிணை மனுவை நிராகரித்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. சதியில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும், இவருக்கும் பிணை வழங்கினால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்துவர் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
ஆனால் கனிமொழி கலைஞர் குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு வங்குரோத்தில் போவதை டெல்லி நீதிபதி அறியவில்லைப் போலும் !

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.