Wednesday, June 15, 2011

சனல் - 4 வின் ஆவணப்படம் ஒளிபரப்பின் எதிரொலி:சிறிலங்காவின் கொடூரக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரித்தானியா பிடிவாதம்

யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் மீது இலங்கை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சனல் 4வின் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை காண்பிக்கப்படாத இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்களின் தொகுப்பினை இலங்கையின் கொலைக்களங்கள் என்ற தலைப்பில் சனல் 4 இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.35 மணியளவில் ஒளிபரப்பியது. இக்காணொளியில் தமிழர்கள் அநீதியான முறையில் இராணுவத்தினால் கொல்லப்படும் காட்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த காணொளி சித்தரிக்கப்பட்டவை என்றும் இலங்கை இராணுவத்துக்கு அபகீர்த்தியேற்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு இலங்கை இராணுவம், விடுதலைப் புலிகளை இயக்கத்தினை தோற்கடித்து 25 வருட யுத்தத்தை நிறைவு கொண்டு வந்தது.

சுமார் 1 லட்சம் மக்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாகவும் யுத்தத்தின் போது இரு தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணொளியினை பார்த்ததும் தான் அதிர்ச்சியடைந்ததாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் ஏனைய சர்வதேச சமூகங்களுடன் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை> இலங்கைக்கு திருப்பி அனுப்பவென 40 தமிழர்கள் பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுயள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காட்சியப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.