Friday, May 13, 2011

அமைச்சர் பீரிஸ் தலைமையில் அதரவு தேடி டில்லிக்கு சிறப்பு குழு

சிறிலங்கா வெளிநாட்டமைச்சர் பேரசிரியர் பீரிஸ் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் அவசர அவசரமாக டில்லி விரைகின்றனர். நாளை மறு நாள் டில்லி செல்லும் இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் இலங்கை காட்டி வரும் எதிர்ப்பிற்கு ஆதரவு தேடவுள்ளனர்.
.
சிறிலங்கா அரசு முன்னதாக பசில் இராஜபக்‌ஷாவை அனுப்ப திட்டமிட்டு இருந்தது. ஆனல் பசில் இராஜபக்‌ஷவை ஒரு பொய்யர், வாக்கு மாறுபவர் என டில்லி நிர்வாகம் கடிந்துள்ளது. ஏனென்றால் இந்திய முதலீட்டாளர்களுக்கு, வடக்கு கிழக்கில் போர் முடிந்தவுடன் முதலீடு செய்ய வாய்ப்பளிப்பதாக வாக்குறுதி அளித்தவர் தான் இந்த பசில்.

ஆனால் போர் முடிவுக்கு வந்தவுடன் காலைவாரிவிட்டார் பசில் இராஜபக்‌ஷ. கூடவே இந்தியா ஈழத்தமிழர்களுக்கு தான் செய்த அனியாயத்திற்கு பிரயாசித்தம் தேட சில நிவாரண உதவிகளை போர் நடைபெற்ற மண்ணில் செய்ய வெளிக்கிட்டது. ஆனால் அதற்கும் ஆப்புவைத்த பசில் எது செய்வதானாலும் தமது குடும்பத்தின் ஊடகத்தான் செய்யவேண்டும் என சட்டம் வேறு போட்டனர்.

இதனால் தற்போது பசில் மற்றும் கோத்தபாய இராஜபக்‌ஷாக்களுக்கு டில்லி நிர்வாகம் பிடரியை தான் காட்டுகின்றது. இன்று தமிழ் நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியாகி காங்கிரஸ்- தி. மு.க. கூட்டணியை வரலாறு காணாத தோல்விக்கு இட்டுச்சென்றதில் இலங்கைப்பிரச்சினையும் ஒரு காரணமாக உள்ளது.

ஆகவே மேற்கூறப்பட்ட காரணத்தால் பக்‌ஷா குடும்பங்கள் இனி டில்லிப்பக்கம் போகாமல் விடுவதே நல்லது. ஆகவேதான் மஹிந்தவும் சாணக்கியமாக அமைச்சர் பீரிஸ் அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியா போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் தமக்கு ஆதரவாக திடமான முடிவுகளை தரவில்லையே என மஹிந்தவிற்கு சிறிய சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே தான் டில்லியின் நிலைப்பாடு தொடர்பில் நாடி பிடிக்க பீர்ஸ் அணி செல்வதுடன் அங்கு தமக்கான ஆதரவையும் பெறதிட்டமிட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.