நாற்பத்தினாலு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்கள் ஒரு மரண அடியை தொடுத்தனர். அது அன்று 1967-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் இருந்த காங்கிரசை நோக்கி தொடுக்கப்பட்டது. அன்று அளுங்கட்சியாகவிருந்த காங்கிரசுக் கட்சியானது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை துணை ராணுவப்படைகளை வட இந்தியாவிலிருந்து தருவித்து வீதியில் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுப் பொசுக்கியது.
ஒருமாதம் நடந்த இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வீதியில் சுடப்பட்டுப் பலியாயினர். இது பொறுக்க மாட்டாத தமிழக மக்கள் 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசுக்கு மரண அடி கொடுத்தனர். அன்று தொலைந்ததுதான் காங்கிரசுக் காடையர்களின் கட்சி. இன்னமும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முயலும் போதெல்லாம் சம்மட்டி அடி விழுந்து கொண்டிருக்கிறது. இதுவரை காங்கிரஸ் தமிழ்நாட்டில் தன் தலையைத் தூக்க முடியவில்லை.
அன்றிலிருந்து இன்று நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பின் தமிழக மக்கள் மீண்டும் அந்த மரண அடியைத் தொடுத்திருக்கின்றனர். இப்போது மரண அடி விழுந்திருப்பது தி.மு.க.வின் மீது. அதன் தலைவர் கருணாநிதியின் மீது. இதே தி.மு.க. தான் அன்று காங்கிரசின் மீது மரண அடி விழுந்த போது அதன் பலனை அறுவடை செய்த கட்சி. காங்கிரசுக்கு கல்தா கொடுத்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றிய கட்சி. தமிழகத்தை தனி நாடாக்குவோம் என்று மார்தட்டிய கட்சி. இந்திய ஆட்சிக்கெதிராக இடி முழக்கம் செய்த கட்சி. ஆனால் அன்றைய தி.மு.க. தலைவர் அண்ணாத்துரை ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தனி நாட்டுக்கோரிக்கையை குழி தோண்டிப் புதைத்ததோடல்லாமல், தான் முதலமைச்சரான பிறகு, எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்த வீரஞ்செறிந்த ஐநூறு தமிழ் இளைஞர்களின் இறப்புக் குறித்து ஒரு விசாரணை கமிஷன் கூட அமைக்க வில்லை. ஏனெனில் அவருக்கு பதவி வேண்டும். விசாரணைக் கமிஷன் அமைத்தால் இந்திய அரசு அவரை டிஸ்மிஸ் செய்து விடும். எனவே தம் மக்களின் ரத்தத்தின் மீது பாய்விரித்துப் படுத்து தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்.
அன்று தமிழக மக்கள் வழங்கிய அந்த மரண அடி இன்று இரண்டாவது முறையாக தி.மு.க.வின் மீது விழுந்திருக்கிறது. இரண்டு மரண அடிகளுக்கும் நோக்கம் ஒன்றுதான். அது தமிழர் விடுதலைதான்! மரண அடியென்றால் இதுதான் மரண அடி. இனி தலை எடுக்கவேவொட்டாதபடி விழுந்த இறுதி இடி. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை மாறி மாறி பிடித்த கட்சியான தி.மு.க.வானது இன்று, நேற்று முளைத்த தே.மு.தி.க.வை விட மிக மோசமான நிலையில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது.
எதிர்க் கட்சி என்ற தகுதியையும் இழந்து பரிதாப நிலையை அடைந்து விட்டது. இந்த நிலையை அடைய கருணாநிதி என்ன தவறு செய்தார்? அவரல்லவா இந்தியத்தின் தன்னிகரற்ற அரசமதியூகி. அவருக்கா இந்தத் தோல்வி! அதே வேளை எந்த முன்னேற்றமுமின்றி, மாவட்ட அமைப்புக்களெல்லாம் சிதறிப் போய் நிலையழிந்து கிடந்த அ.தி.மு.க.வுக்கு இத்தனை பெரிய வெற்றியா? நம்ப முடியவில்லையே!
இதுபற்றி தமிழகத்தின் டீக்கடைகள் முதல் கிராமத்து வீடுகள் வரை என்ன பேசிக் கொள்கின்றனர்? எல்லோரும் பேசுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது….கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடும் இனப்படுகொலையில் கருணாநிதி ஆடிய கபட நாடகம்தான்! தங்கள் சொந்தங்களின் உடலங்கள் பிய்த்தெறியப்பட்டபோது தமிழர்களுக்கு தனிநாட்டு முழக்கம் செய்து பூமாறி பொழிந்த கருணாநிதி தன் பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவி வாங்கித்தருவதற்காக கொலைகாரி சோனியா காந்தியின் காலில் விழுந்த படி இருந்தார்.
ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற டெல்லிக்குப் போகாத கருணாநிதி, தன் மகன் ரவுடி அழகிரிக்கு அமைச்சர் பதவி வேண்டி 2009 மே 18-ம் நாளன்று டெல்லி போய் நின்றார். இதுதான் தமிழக மக்கள் மனதில் பசு மரத்தாணி போல் பதிந்து நின்றது. எப்படியும் தன் குடும்ப ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், வரும் தேர்தலிலும் வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியை தன் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும், தான் இறுதி மூச்சு வரை முதல்வர் பதவியில் இருந்தபடியே உயிரை விட்டு மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கருணாநிதியின் எல்லாக் கனவுகளுக்கும் வேட்டு வைத்து விட்டனர் தமிழக மக்கள். இனி அவர் பிள்ளைகள் பதவிக்கு வரவும் முடியாது. ஏனெனில் அவர்களில் யாரும் தனித் திறன் இல்லாதவர்கள். தி.மு.க.வும் மக்கள் விரும்பும் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இல்லாமல் காலியாகவுள்ளது. எனவே கருணாநிதியின் மறைவுக்குப் பின் தி.மு.க. இல்லாதொழிந்துவிடும் நிலையுள்ளது.
கருணாநிதி குடும்பத்தின் எதிர்கால அரசியல் திட்டங்களை ஏன் தமிழக மக்கள் கலைத்துப் போட்டனர்?
ஏன்? ஏன்? ஏன்?
பில்லியன் டொலர் பெறுமான இக்கேள்விக்கான விடை முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கிறது. அங்குதான் தமிழர்கள் ஒருலட்சம் பேரின் உடலங்கள் சிதறடிக்கப்பட்டன பட்டப்பகலில். எல்லாம் கருணாநிதி அறிந்தே நடந்தது. அவரால் தடுத்திருக்க முடியும். அதற்கான அபார ஆற்றல் அவரிடம் இருந்தது. ஆனால் அவர் அந்த அபார ஆற்றலை தன் ரவுடி மகனுக்கு அமைச்சர் பதவி வாங்குவதற்கே பயன்படுத்தினார். ஒருலட்சம் தமிழர்களின் எதிர்காலம் சிதறடிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலை கொள்ள வில்லை. தேர்தல் வர இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. அதற்கு முன் எண்ணிறந்த இலவசங்களை வாரி வழங்குவோம். தேர்தலின்போது பணத்தை தண்ணீராகக் கொட்டுவோம் என்ற அவரது சாணக்கியத்தனத்திற்கு வேட்டு வைத்தது தேர்தல் ஆணையபீடம். தேர்தல் ஆணையபீடம் தமிழ்நாட்டை போர்க்களம் போல மாற்றி கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகளின் பண மழையை தடுத்து நிறுத்தி வெற்றி கண்டது. இதனால் தேர்தலுக்கு முன்னமேயே கருணாநிதி தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் இலவசங்கள் கைகொடுக்கும் என்று அவர் நம்பியிருந்தார். போரின் இறுதி நாட்களில் எந்த நாடாவது வந்து தலையிடாதா என்று புலிகள் எதிர்பார்த்ததைப் போல, கருணாநிதியும் தேர்தல் நெருங்கும் நாட்களில் இலவசங்கள் கைகொடுக்காதா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்!
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச ஆம்புலன்ஸ் திட்டம், இலவச கலர், "டிவி', இலவச, "காஸ்' அடுப்பு, இலவச கான்கிரீட் வீடு திட்டம், பல்வேறு அரசுத் துறைகளில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மேம்பாலங்கள், சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதால், சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி கிடைக்கும் என்று, தி.மு.க., தலைமை நம்பியது.மேலும், கடந்த தேர்தலில் இலவசத் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை மனதில் கொண்டு, இந்த தேர்தலில் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் உட்பட பல்வேறு இலவசத் திட்டங்களை, தி.மு.க., அறிவித்தது. ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களும், தேர்தலையொட்டி அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களும், மீண்டும் வெற்றியைக் கொடுக்கும் என, தி.மு.க., தலைமை உறுதியாக நம்பியது.
ஆனால் இதையெல்லாம் மக்கள் ஏற்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக்கின. உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டியதும், இலவச உதவிகளைச் செய்ய வேண்டியதும் ஒரு அரசின் கடமை என்ற அளவில் தான், தி.மு.க., பிரசாரத்தை மக்கள் பார்த்தனர். மாறாக மக்கள் மனங்கள் தாங்கள் தொலைக் காட்சியிலும், கணினித் திரையிலும், செய்தித் தாளிலும் கண்ட காட்சிகளையே நினைத்துக் கொண்டிருந்தன. அய்யகோ நம் மொழி பேசும் நம் சொந்தங்களுக்கு நம்மால் உதவ முடியாமல் போய் விட்டதே! அதற்கு இந்தக் கருணாநிதியல்லவா காரணம்!! அழுதனர் தமிழக மக்கள் தங்கள் மனங்களில். தாங்கமுடியாத நெஞ்சங்கள் தம்மை தீயிட்டுப் பொசுக்கி தற்கொலை செய்து கொண்டனர். அன்று வாய்ப்பு கிடைக்க வில்லை. இன்று வாய்ப்பு கிடைத்தது. 44 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசுக்கு கொடுத்த அதே மரண அடியை வாய்ப்புக் கிடைத்தவுடன் தி.மு.க.வுக்கும் கருணாநிதிக்கும் கொடுத்தனர். எப்படி இனி காங்கிரஸ் தமிழகத்தில் தலை தூக்க முடியாதோ, அப்படி இனி தி.மு.க.வும் தமிழகத்தில் தலை தூக்க முடியாது எனத் தெளிந்த தீர்ப்பை வழங்கினர்.
இந்தத் தீர்ப்பானது தி.மு.க.வின் மூடு விழாவுக்கு வழி வகுத்து நீண்ட நெடுங்காலம் பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாயுள்ளது. ஏனெனில், இன்றைய இந்தத் தீர்ப்பை – தி.மு.க.வுக்கு இந்த மரண அடியை வழங்கியவர்கள் பெரும்பாலும் புதிதாக வாக்களிக்க வந்த இளைய தலைமுறையினரே! 80 வீதமாக விழுந்த வாக்குகளில் இவர்களின் வாக்குகளே தீர்ப்பை உறுதி செய்தது. முதியவர்கள் ஒதுங்கிக் கொள்வர். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர்தான் வரும் பத்தாண்டு காலத்துக்கும் தீர்ப்பு வழங்கப்போகிறவர்கள். அதே இளைய தலை முறையினர்தான் ஈழ மக்களின் அவலக்குரலை அதிகமாகக் கேட்டவர்கள். எனவே இனி தி.மு.க. தலையைத் தூக்கும் பேச்சுக்கே இடமில்லை. கருணா கும்பலின் கனவுகள் யாவற்றையும் நொறுக்கியெறிந்து விட்டனர் தமிழகத்து இளைய சூரியன்கள்.
‘அன்று உங்கள் எதிர்ப்பார்ப்புக்களை எங்களால் நிறைவேற்ற முடிய வில்லை ஈழச் சொந்தங்களே, எங்கள் கைகள் அன்று கட்டப்பட்டிருந்தன! இன்று உங்களுக்காக எங்கள் இதயங்களைத் திறந்து வைத்தோம். எங்களுக்கு கிடைத்த முதன்மையான ஆயுதமான வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி உங்களின் ரத்தத்தில் பேரம் பேசியவர்களைப் பழிவாங்கினோம். உங்கள் எதிர்காலம் சிதறடிக்கப்பட்டதைப்போல எம்மண்ணிலிருந்து உங்களுக்கு துரோகமிழைத்த காடையர்களின் எதிர்காலத்தையும் சிதறடித்து விட்டோம்’ – இதுதான் தமிழ்நாட்டு மக்கள் ஈழச் சகோதரர்களுக்கு இன்று விடுக்கும் செய்தி.
இன்றைய தமிழகத்தின் வெற்றியானது அனைத்துலகப் போக்குகளில் ஒரு முதன்மைத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புது தில்லியால் இதுவரை உலகில் எதை தமிழர்களுக்காக உரத்துக் கூற முடியவில்லையோ, அதை இன்று ஜெயலலிதா உரத்துக் கூறுகிறார். இதே குரல் நீடிக்குமானால் அது இந்திய வெளியுறவுக் கொள்கையை தன்பக்கம் திருப்பும் வாய்ப்புள்ளது. மேலும், ஈழ இனப்படுகொலையை மறுக்கும் புதுதில்லி மட்டுமல்ல, றொபெர்ட் பிளேக், எரிக் சோல்ஹேம் ஆகியோரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கும் ஜெயலலிதாவின் குரல். அவர்கள் இதுவரையிலும் கருணாநிதியின் கள்ள மவுனத்தால் ஊக்கமாக ராஜபக்சேவுக்கு சாதகமாகப் பேசினர். இப்போது தமிழ்நாட்டிலிருந்து புதுக்குரல் கிளம்பியுள்ளது. இதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்தபோதே தமிழக மக்கள் இந்த உலகத் தரகர்களின் முகங்களில் சாணியை எறிந்து விட்டனர். இப்படியொரு ஆற்றலை தமிழக மக்கள் வெளிப்படுத்தியிருப்பது ஒரு வரலாற்று வியப்பு. இது தலைவர் தங்கி வாழ்ந்த மண் என்பதை தமிழக மக்கள் இன்று நிரூபித்து விட்டனர்.
வரும் நாட்களில் ஈழத் தமிழர்கள் அகவணக்கம் செலுத்தத் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு அவர்களின் அகவணக்கத்துடன் மகிழ்வணக்கமும் சேர்ந்து கொண்டுள்ளது. ஆம்…தமிழகத் துரோகிகளைத் தோற்கடித்த தமிழக மக்களுக்கான மகிழ்வணக்கம்! அகவணக்கமும், மகிழ்வணக்கமும் சேர்ந்து வரும் இப்பொன்னான வேளையில் இனி நம்முன்னுள்ள கடமை என்ன? இனி அங்கும், இங்கும் இருவழிப் பாதையில்லை. அது தனி ஈழமும், தனித் தமிழகமும்தான். அதனை நோக்கிய பயணத்தில் தமிழ் நாட்டைத் துணைப் போர்க்களமாக்கிட தமிழக மக்கள் மீண்டும் தயாராகி உள்ளனர். இந்தத் துணைப் போர்க்களத்தின் துடுப்புக்களை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள் உலகத் தமிழர்களே! அகவணக்கமும், மகிழ்வணக்கமும் சேர்ந்து வரும் வேளையில் நாம் ஒரு வழிப்பாதையில் சேர்ந்து பயணிப்போம், வாருங்கள்! முத்துக்குமாரை ஆரத்தழுவிய நெருப்பு இனி நம் எதிரிகள் யாவரையும் முத்தமிடட்டும்.
ஈழதேசம்.கொம்முக்காக நிலவரசு கண்ணன்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.