தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான மூன்றாம் ஈழ யுத்தத்தில் இடம்பெற்ற பாரியளவிலான நிதிமோசடியான 62 கோடி ரூபா நிதி மோசடியை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மூன்றாம் ஈழ யுத்தத்தில் இடம்பெற்ற பாரியளவிலான நிதிமோசடியென்பதுடன் இதுவே இராணுவ வராற்றில் நடந்த மிகப்பெரிய மோசடியெனவும் சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வெள்ளைக்கொடி விவகார வழக்கில் சரத் பொன்சேகா வழங்கிவரும் சாட்சியங்களின் போது கோத்தபாய ராஜபக்ஸவின் மேலும் பல கொள்ளையடிப்புக்கள் குறித்த தகவல்கள் வெளிவரவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்தத் தகவல்கள் வெளிவந்தால் முப்படைத் தளபதிகளையும் மீறிச் சென்று போர் மூலம் பெருந்தொகை பணத்தை சம்பாதித்தவர் என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸ வரலாற்றில் இடம்பெறக்கூடும் என சிரேஸ்ட இராணுவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் மோசடியானது 80 மில்லிமீற்றர் எறிகணைத் தொகையை ஏற்றிய கப்பல் ஒன்றுக்கு 100 கோடி ரூபா செலுத்தி சிம்பாப்வே நாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட போது விடுதலைப் புலிகள் அந்தக் கப்பலைக் கடத்துவதற்கான சூழ்ச்சிசெய்த மோசடியே மிகப் பெரிய மோசடியாகும்.
இதுதொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர் என்பது தெரியவந்தது. இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தலுவத்தவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தேசிய மாணிக்கக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமித்தார்.
இதனைத் தவிர இரண்டாவது பாரிய மோசடியானது பிரித்தானியாவிடமிருந்து சீ 130 ரகத்தைச் சேர்ந்த மூன்று விமானங்களைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியுடன் நிதியைப் பெற்று அந்தப் பணத்தில் இரண்டு விமானங்களை மாத்திரம் கொள்வனவு செய்த மோசடியாகும்.இதன்போது 90 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டதாக கணிக்கிடப்பட்டிருந்தது.
இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் ஜயலத் வீரக்கொடியை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக ஜனாதிபதி நியமித்தார். அதேவேளை, இலங்கை கடற்படையின் டோரா தாக்குதல் படகிற்காக 30 மில்லிமீற்றர் ஆயுதக் கட்டமைப்பொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் 76 கோடி மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் கடற்படைத் தளபதி எட்மிரல் தயா சந்தகிரியை குற்றவாளியெனப் பெயரிட்டது. எனினும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தயா சந்தகிரியை இலங்கை பொசுபேட் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார் என்று போன்ற இந்தத் தகவல்களை சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் வெளியிட்டுள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.