உலகத் தமிழர்களே, தாயகத்தோரே, புலம் பெயர் உறவுகளே, மே 18 வந்துவிட்டது. நெஞ்சில் கடுஞ்சினமும், விடா முயற்சியும் விடுதைப் பற்றும் நிலைத்து நிற்கின்றன.
மே 18 அன்றே எங்கள் ஆவியும், உடலும் உடைமையும் எல்லாம் இழந்தோம், இன்றே அந்த நாளை மீண்டும் நினைவு கூர்ந்தோம், என்றும் அழியா விடுதலைப் பற்றை எமது இலட்சிய நெறியாய் கொள்வோம்.
இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழத்தமிழரின் விடுதலை வரலாறு மனித குலத்தின் தன்மான உணர்விற்கும் விடுதலை எழுச்சிக்கும் தூண்டு கருவியாக விளங்கிறது. உலக வரலாற்றை இயக்குவது சுதந்திர வேட்கை ஒன்று மாத்திமே.
மே18 எமது இனத்தின் எழுச்சி நாள் தொடரும் விடுதலைப்போருக்கான உறுதி எடுக்கும் நாளாகவும் வலிமை பெரும் நாளாகவும் தீர்மானிப்போம். நீண்டதும். கடினமானதுமான எமது விடுதலைப் போரில் நாம் கற்ற பாடங்களும் பெற்ற அனுபவங்களும் எமக்கு வழிகாட்டியாக அமைகின்றன.
எமது இலட்சியம் தமிழீழம் ஒன்றுதான் நாம் எதிர்பார்த்த உலக மாற்றங்கள் எமக்குச் சாதகமான சமிக்கைகளைத் தருகின்றன. எமது இலட்சியம் நிட்சயம் நிறைவேறும் இதற்காக நாம் சோர்வின்றி உழைப்போம்.
ஈழத் தாயின் கைவிலங்கு உடையும் நாள் நெருங்கிவிட்டது. அரசியல் இராசதந்திர நகர்வுகளை நாம் ஒன்றிணைந்த சக்தியாக மேற்கொள்ள வேண்டும். இது எமது இலட்சியப் பயணத்தை ஊக்குவிக்கும்.
“போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” என்ற எம் தலைவர் அவர்களின் உறுதி மொழியை எமது வழிகாட்டியாக கொண்டு செயற்படுவோம்.
- நன்றி -
ப. கலையரசன்
செயலாளர்,
ஐரோப்பிய தமிழர் பேரவை

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ப. கலையரசன்
செயலாளர்,
ஐரோப்பிய தமிழர் பேரவை
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.