மே - 18 தேசிய துக்க நாள், சபதமும் உறுதி மொழியும் மட்டுமே ஏற்கக்கூடிய நாள், இந்த சபதங்களும் உறுதி மொழியும் சுதந்திர ஈழத்தை உருவாக்கி விடும் என்று நம்புகிறார்கள் புலம் பெயர் மக்களும், தமிழ் நாட்டின் பன்றித் தொழுவ முகாம்களில் பன்றிகளோடு பன்றியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள். மேலும் இவ்வாறு சொல்கிறார்கள் ஒரு லட்சம் காவல் தெய்வங்கள் இந்தியப் பெருங்கடலில் இருக்கிறார்கள். சும்மா விட்டு விடாது அவர்களின் சாபங்கள் என்று. மத்தியில் ஆளும் சோனியா காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் ஆளும் கருணாநிதியின் தி.மு.க.வும் ரொம்ப நல்ல பெயரை எடுத்துள்ளார்கள் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் இவையெல்லாம் மே - 18 பிறகுதான் இந்தப் பெரும் பேறு பெற்றார்கள்.
ப.ழ. நெடுமாறன் அவர்கள் சொன்னது போல, அங்கே ஒரு தானைத் தலைவன் போருக்கு தன் தனயனை அனுப்புகிறான், இங்கே தன்னை தலைவன் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் மகளுக்கும் மகனுக்கும் மந்திரி பதவி வேண்டி சோனியாவின் காலை கெட்டியாகப் பிடித்து கெஞ்சி இருக்கிறார், பெற்றார் பதவியை. வந்தார்கள் தமிழ் நாட்டிற்கு. மக்கள் சேவை செய்யவா...? ஊரார் பணத்தை கொள்ளையடித்து மொரிசியசில் மலேசியாவில் கொண்டு போய் குவித்து வைப்பதற்கு.
இந்த கொள்ளையடிக்கும் தி.மு.க. தலைவருக்கு மக்கள் ஓய்வு கொடுத்து விட்டார்கள் என்று, தேர்தல் தோல்விக்கு காரணம் சொல்லி உள்ளார். அரசியலின் பணி மக்களின் பணி அன்றோ..? என்றெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தையிரியம். அரசில் இருந்தால் தனது மக்களின் பணி, இல்லையென்றால் ஓய்வு. பகிரங்கமான திருடர்களின் ஒப்புதல் வாக்குமூலம். எனக்கு திருட்டைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பது போல. இதில் அவனெல்லாம் தமிழின தலைவனா..? என்ற பொறாமை வேறு. யாரைப் பார்த்து, உலக தமிழர்களின், விடுதலைப் புலிகளின் புரட்சித் தலைவரைப் பார்த்து.
இந்த கொள்ளைக் கும்பலைப் பார்த்து காரி உமிழ்கிறது பிற சமூகங்கள், வெளிநாடுகளில் தலை கட்ட முடியவில்லை தமிழர்களால், இந்தியர்களால். சோனியா அம்மையாரும் கருணாநிதியும் இணைந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலால். 2009 அன்று எப்படி இருந்தார்கள் சோனியாவும் மு.க.வும். இரண்டே ஆண்டுகளில் எப்படிப்பட்ட பேர் எடுத்து இருக்கிறார்கள் இந்த இருவரும். ஒரு தமிழ் தலைவர் இவ்வாறு கூறினார். கருணாநிதியை தன் சொந்த குடும்பத்திற்காக மட்டுமே உள்ளவர் என்று கருதினோம், ஆனால் இன்றுள்ள நிலைமையோ வேறாக உள்ளதே என்று. அதாவது சுயநலவாதியாக மட்டும் அல்ல, மாபெரும் கோழையாக, தன் பெயர், தன் பெருமை என்று மட்டுமே வாழக் கூடியவர் என்றார். தனது மகள் கனிமொழி கிட்டத்தட்ட சிறைக்கைதி போலவே வரும் 20 - ந் தேதி வரை காலை முதல் மாலை வரை நீதி மன்றத்தில் இருக்க வேண்டும் என்ற நிலையில், அவர்களைக் கூட காப்பாற்ற முடியாத திக்கற்றவராக இருக்கிறார் என்று.
மே - 18 தமிழ் சமூகத்திற்கு மனித உரிமைகள் குறித்து உணர்த்திய நாள், மே - 18 போர்க்குற்றம் பற்றிய புரிதலை உணர்த்திய நாள், மே - 18 தமிழ் சமூகத்திற்கு உலக அரசியலை புரிந்து கொள்ள உதவிய நாள். ஒரு சின்னஞ் சிறிய சமூகத்திற்கு இவையெல்லாம் புரிய, அறிய வைத்ததினால் என்ன என்று கேட்கலாம். ஒரு சமூகங்களின் ஊடாக உலக அரங்கில் பல மாற்றங்களை, அரசியலை உருவாகிக் கொண்டிருக்கும் நாள் தான் என்றால் மிகை இல்லை. இந்த இரண்டு வருடங்கிளில் தமிழ் சமூகங்கள் கற்றுக் கொண்ட விசயங்கள் ஏராளம், ஏராளம். இன்னும் வரப்போகும் ஆண்டுகள் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கையில் உலக அரங்குகளில் உலக அரசியலில் ஏற்படும், ஏற்படப் போகும் மாற்றங்களை அறிய தூண்டுகிறது என்றால் மிகை இல்லை.
எனவே, தமிழகத்தின் புதிய அரசான அ.தி.மு.க. வின் ஜெயலலிதாவினால் ஈழத் தமிழருக்கு என்ன நன்மைகள்..? என்று கேள்வி எழுப்பப்படுவதைத் தவிர்த்தும் வேறு சில விசயங்கள் உள்ளன. முதலில் இவ்வளவு பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்று தி.மு.க.வின் உயர்மட்டக் குழு, கீழ்மட்டகுழு என்று யாராலும் கண்டு பிடிக்க முடியாது, அவர்களின் நிலையோ என்ன காரணம் என்றெல்லாம் ஆராயும் நிலையில் இல்லை என்பது தான் உண்மை.மேலும் இவர்கள் இனி மேல் பணத்தை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்று முன்பே கண்டு கொண்டு விட்டார்கள்.கொள்ளையடிக்க, திருடுவதற்கு எங்களுக்கு வாக்கு அளியுங்கள் என்றுதான் சொல்ல முடியும் அதுதான் நிலைமையும் கூட.
செந்தமிழன் சீமான் சொல்வதைப் போல, ஈழத் தமிழர் விவகாரம் தான் இந்த தேர்தலில் முதன்மையாக இருந்தன என்பதை மறுக்க முடியாது, கூடவே மின்வெட்டு, ஊழல், குடும்ப ஆதிக்கம் என்றெல்லாம் சேர்ந்து கொண்டன. இந்த தேர்தல் வாயிலாக பல நல்ல விசயங்களை தமிழக மக்கள் உணர்த்தி உள்ளார்கள் திராவிட கட்சிகளுக்கு. தமிழ், தமிழர் நலன் இவையெல்லாம் எதற்கு..? என்று இனிமேல் இருக்க முடியாது. நான் நினைத்தேன் செய்தேன் என்றும் சொல்ல முடியாது. வரும் காலங்களில் தமிழர் அல்லாதோர் தமிழகத்தில் கட்சி துவங்க முடியாது, ஆட்சியைப் பிடிக்க முடியாது. திராவிட அரசியல் தமிழகத்தில் இருந்து துடைத்து எறியப்படும், என்ற தமிழனின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் சூழலை மே - 18 உணர்த்தியுள்ளது.
தமிழ் இனம் இனிமேல் அடக்கி ஒடுக்குவதற்கான இனம் அல்ல என்பதும், உலக அரங்கில், உலக அரசியலை முன்னெடுக்கும் ஒரு இனமாக, சுதந்திரம் பெரும் ஒரு இனமாக உருவாகும் சூழலை கொண்டு வந்து சேர்த்து விட்டது தமிழர்களிடம் இந்த மே - 18. இலங்கையின் சுதந்திர இனமான தமிழ் ஈழமும், உலகத் தமிழர்களின் ஒன்றினைவும் காலத்தால் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்ட நாள் இந்த மே - 18. என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சங்கிலிக்கருப்பு.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.