2009 ம் ஆண்டு சிங்கள இனவெறி அரசின் முப்படைகளுக்கு எதிராக கடும்சமர் புரிந்த தமிழீழ விடுதலைப்புலிகளை வெல்லமுடியாது கோழைத்தனமாக மேற்கொள்ளப்பட்ட இரசாயணக் குண்டு, மற்றும் நச்சுவாயுத் தாக்குதலுக்குள் சிக்குண்டு விடுதலைக்கு வித்தாகிய தமிழர் படையணியாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் உயர்நிலைத் தளபதிகள் உட்பட்ட 400 ற்கும் மேற்பட்ட போராளிகள் வீரமரணம் அடைந்த வரலாற்று நாயகர்களை நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் நடைபெறவுள்ளது.
ஆனந்தபுரம் சமர்க்களத்தில் வீரகாவியமாகிய பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் தமிழேந்தி, கேணல் இளங்கீரன் ஆகிய மாவீரர்களையும், மார்ச், சித்திரை மாதங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும், தியாகி அன்னை பூபதி உட்பட அனைத்து நாட்டுபற்றாளர்களையும், மாமனிதர்களையும் நினைவுகொளும் நிகழ்வாக இந்த நிகழ்வு அமைகிறது.
பிரித்தானியத் தலைநகரான லண்டனின் ஹறோ பகுதியில் உள்ள Uxbridge Road, Hatch End, Middlesex, HA5 4EA எனும் முகவரியில் அமைந்துள்ள "Harrow Arts Centre" பிரமாண்டமான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 17-04-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிமுதல் 9:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வில் அனைத்துப் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் வந்து கலந்துகொள்ளுமாறும், எம்மினம் காத்த வீரர்களை நினைவுகொண்டு மலர்தூவி வணங்கிட வருமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈழத் தமிழர் வரலாற்றில் அழியாத நினைவாய் ஆனந்தபுரம் சமர் அமைந்ததும், அதற்காக கொடுக்கப்பட்ட விலையாக வீரத் தளபதிகளையும், பெருந்தொகைப் போராளிகளையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்தாலும் அதற்கு ஈடாய் அனைவரும் ஒன்றுபட்டு அவர்கள் கண்ட கனவை நனவாக்க ஈழம் வெல்வதே அவர்களுக்கும் செலுத்தும் வீர வணக்கமாக அமையும் என்பதால் அவர்கள் நினைவு சுமந்த இந்த நாளில் அவர்களை எம் நெஞ்சங்களில் நிறுத்தி மீண்டும் எழுந்து கொள்வோம், எழுச்சி கொள்வோம்,

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.