ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவிடம் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நேரடியாகக் கேட்கப்பட்ட சம்பவம் ஒன்று
அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பில் அறிய வருகையில்; அமெரிக்காவின் பிரேமிங்ஹாம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில், கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகக் சவேந்திரா சில்வா கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் உரையாற்றிய போது, அம் மண்டபத்துக்குள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் உட்பட நான்கு தமிழர்கள் சென்று சிறிலங்காவின் இனப்படுகொலை தொடர்பான விடயங்கள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
அவரது உரை முடிந்து கேள்வி நேரத்தின் போது, வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லப்பட்டது, மற்றும் இசைப்பிரியாவின் படுகொலை ஆகியனவற்றுக்கு சவேந்திர சில்வாவே பொறுப்பு எனவும், படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில், சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும் எனவும் சுபா சுந்தரலிங்கம் வலியுறுத்திக் கேள்வி தொடுத்தார்.
இவற்றுக்கு நியாயபூர்வமான பதில்கள் எதனையும் மேஜர் ஜெனரல் சர்வேந்திர சில்வா வழங்காது, போர்க்குற்றங்களில் நான் ஈடுபடவில்லை. இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அவ்வாறு போர்க்குற்றம் புரிந்திருந்தால் அது ஒருநாள் நிச்சயம் வெளி உலகுக்குத் தெரியவரும் எனப் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மண்டபத்திற்கு வெளியேயும், சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்மக்கள் சிலர் ஈடுபட்டிருந்ததாகவும் மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.