Friday, February 04, 2011

'ஈ நியூஸ்' தாக்குதலில் இருந்து கோத்தபாய தப்பித்துக் கொள்ள முயற்சி

லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தாக்கப்பட்டமை தொடர்பில் பாதாள உலக குழுவினரை குற்றம் சுமத்தி விட்டு கோத்தபாய ராஜபக்ஷ தாம் தப்பிக் கொள்ள முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பெயர் குறிப்பிடாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த தீ வைப்பு சம்பவத்தை இராணுவத்தின் கஜபா ரஜமென்ட் பிரிவின் குழு ஒன்றே மேற்கொண்டது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தமது பெயருக்கு கலங்கம் ஏற்படாத வகையில், இந்த சம்பத்துக்கு பாதாளகுழுக்களே காரணம் என குற்றம் சாட்ட பாதுகாப்பு செயலாளர் தயாராகிறார்.

அண்மைக்காலமாக கோத்தபாய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்ற பல இரகசிய செயற்பாடுகளை லங்கா ஈ நிவ்ஸ் இணையத்தளம் வெளியிட்டு வந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.