இலங்கையைச் சேர்ந்த போர்க் குற்றவாளிகள் 73 பேர் பிரித்தானியாவில் வாழ்கின்றார்கள் என்று பிரித்தானிய எல்லைக் காப்புப் படையின் யுத்தக் குற்ற விவகாரங்களை கையாளும் விசேட பிரிவு அறிவித்து உள்ளது.
இப்போர்க் குற்றவாளிகளின் பெயர்கள், விபரங்கள் போன்றன ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. இக்குற்றவாளிகளில் இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் இருக்கின்றார்களா? என்பதும் ஊடகவியலாளர்களுக்கு பகிரங்கப்படவில்லை.
ஆனால் இனப்படுகொலை, சித்திரவதை, மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் ஆகியவற்றில் கடந்த ஐந்து வருட காலப் பகுதிக்குள் இவர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்கள் என்று கோடி காட்டப்பட்டு உள்ளது.
உலகின் பல நாடுகளில் இருந்தும் ஒட்டுமொத்தமாக பல நூற்றுக்கணக்கான போர்க் குற்றவாளிகள் பிரித்தானியாவில் வசிக்கின்றனர் என்றும் இவர்களில் 495 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எல்லைக் காப்புப் படை சிபாரிசு செய்து உள்ளது.
ஆனால் இவர்களில் ஐவருக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என எல்லைக் காப்புப் படையின் ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈராக், ஆப்கானிஸ்தான், ருவாண்டா, சிம்பாப்வே, கொங்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க் குற்றவாளிகளும் அநேகர் என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் குசைய்னுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இராணுவ உயரதிகாரிகள், ஆப்கானிஸ்தானின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர், கொங்கோ நாட்டைச் சேர்ந்த பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஆகியோர் இந்த யுத்தக் குற்றவாளிகள் வரிசையில் இடம்பெறுகின்றனர் என்று தகவல்கள் கசிந்து உள்ளன.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.