Tuesday, February 01, 2011

எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர்

எகிப்து நாட்டில் அதிபர் ஹோஸ்னி முபராக்கின் 30 ஆண்டு ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று 7-வது நாளாக எகிப்தில் கலவரம் நீடித்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். எகிப்தில் சுமார் 3600 இந்தியர்கள் உள்ளனர்.

அவர்களில் சுமார் 2200 பேர் தலைநகர் கெய்ரோலில் வசித்து வருகிறார்கள். அவர்களில் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற விபரம் தெரியவில்லை. எகிப்தில் கடைகள் சூறையாடப்படுவதால் நிலமை மேலும் மோசம் அடைந்துள்ளது.

இதையடுத்து கெய்ரோவில் உள்ள இந்தியர்கள் தாங்கள் வெளியேற உதவிசெய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டனர். அதன்பேரில் எகிப்து நாட்டுக்கு மத்திய அரசு ஏர்-இந்தியா விமானத்தை நேற்று அவசரம், அவசரமாக அனுப்பி வைத்தது.

அந்த விமானத்தில் 423 பயணிகள் வர முடியும். நேற்றிரவு அந்த விமானம் கெய்ரோவில் இருந்து புறப்பட்டது. இன்று (திங்கள்) அதிகாலை அந்த விமானம் மும்பை வந்து சேர்ந்தது. அதில் சுமார் 300 பேர் இருந்தனர்.

அவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்கள். டாடா நிறுவன ஊழியர்கள் சுமார் 300 பேர் கெய்ரோ விமான நிலையத்தில் உள்ளனர். அவர்களும் விமானம் மூலம் மீட்கப்பட உள்ளனர்.

எகிப்தில் கலவரம் நீடிக்கும் பட்சத்தில் மேலும் விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். 1900-ல் வளைகுடா போர் நடந்தபோது ஏர்-இந்தியா நிறுவனம் சுமார் ஒரு லட்சம் இந்தியர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.