Tuesday, February 01, 2011

யாழ்ப்பாணத்தில் தனியான இரகசியப் புலனாய்வு

யாழ்ப்பாணத்தில் தனியான இரகசியப் புலனாய்வுப் பொலிசாருக்கான அலுவலகம் ஒன்றைத் திறப்பது குறித்து பொலிஸ் திணைக்களம் ஆலோசித்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தின் எந்தவொரு பொலிஸ் நிலையத்துடனும் இணையாமல், நேரடியாக கொழும்பு தலைமையகத்துடன் மாத்திரம் குறித்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை இணைத்துச் செயற்பட வைப்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்திவருகின்றனர்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற குற்றச்செயல்கள், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஆகியோர் குறித்த விபரங்களை யாழ்ப்பாணத்தில் நியமிக்கப்படவுள்ள விசேட புலனாய்வுப் பிரிவினர் திரட்டவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களின் குற்றப்புலனாய்வுப் பொலிசாரும் எதிர்வரும் காலங்களில் பிரஸ்தாப விசேட இரகசிய புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்படவுள்ளனர் என்பதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் தனியான இரகசியப் புலனாய்வுப் பொலிசாருக்கான அலுவலகம் ஒன்றைத் திறப்பது குறித்து பொலிஸ் திணைக்களம் ஆலோசித்து வருகின்றது.யாழ்ப்பாணத்தின் எந்தவொரு பொலிஸ் நிலையத்துடனும் இணையாமல், நேரடியாக கொழும்பு தலைமையகத்துடன் மாத்திரம் குறித்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை இணைத்துச் செயற்பட வைப்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற குற்றச்செயல்கள், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஆகியோர் குறித்த விபரங்களை யாழ்ப்பாணத்தில் நியமிக்கப்படவுள்ள விசேட புலனாய்வுப் பிரிவினர் திரட்டவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களின் குற்றப்புலனாய்வுப் பொலிசாரும் எதிர்வரும் காலங்களில் பிரஸ்தாப விசேட இரகசிய புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்படவுள்ளனர் என்பதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.