யாழ்ப்பாணத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அங்கு துப்பாக்கி கலாச்சாரம் மேலோங்கி இருப்பதாகவும்,
இந்த நாட்டில் யுத்தம் நிறைவடைந்தாலும் துப்பாக்கியைக் கொண்டு ஆட்சி நடத்தப்படுவதாகவும், துப்பாக்கியைக் கொண்டு ஆட்சி செய்யவதானது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடுகின்றது.
அத்துடன் தற்போது யாழ்ப்பாணத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அங்கு துப்பாக்கி கலாச்சாரம் மேலோங்கி இருப்பதாகவும், இதனை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிடுகின்றார்.
எனவே இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் எனக் குறிப்பிடும் அவர், இந்த நிலைமைத் தொடர்ந்தால் மக்கள் கொதித்தெழுவார்கள் எனவும் எச்சரித்தார்.
அத்துடன் இந்த நிலைமையைத் தொடர்ச்சியாக தக்கவைத்து இந்த நாட்டிலே மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க இந்த அரசு முனைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் தற்போது வடக்கில் இராணுவ நிர்வாகத்தை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடும் அவர், அமைச்சர்களின் குழுக்கள் கப்பம் கோருவதாகவும், பல பழிவாங்கல்களும் உயிரிப்புக்களும் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலைமையானது வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் இடம்பெறுவதாகவும் அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகைள மேற்கொள்வதன் மூலம் அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கின்ற விடுதலைப்புலிகளை மீள தட்டியெழுப்பும் நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் எச்சரித்துள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.