Thursday, January 13, 2011

கிழக்கு வெள்ளம் தொடர்பாக த.தே.கூ இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்திய அரசாங்கம் நிவாரண உதவிகளை வழங்கவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இன்று மாலை இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தாவை சந்தித்து பேச்சு நடாத்தினர்.

விரைவில் கிழக்கு மாகாண வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் நிவாரண உதவிகள் கிடைக்குமென அவர் தூதுக்குழுவிடம் உறுதியளித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.