Tuesday, January 25, 2011

மஹிந்தர் விடயத்தில் மென்மையான போக்கு, மூனுக்கு கண்டனம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விவகாரத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைதி வழியிலான இராஜதந்திரம் என்கிற போர்வையில் மெத்தனப் போக்கைக் கடைப் பிடிக்கின்றார் என்று அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டி உள்ளது.

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஆராயும் ஐ.நா நிபுணர் குழு அதன் அவதானங்களை வரும் நாட்களில் பான் கீ மூனுக்கு சமர்ப்பிக்க உள்ள நிலையில் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.

கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் ஒருவரான Kenneth Roth இக்குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

மனித உரிமைகள் விடயத்தில் உலகத் தலைவர்களின் மெத்தனப் போக்கு என்கிற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய மனித உரிமை மீறல்களை தடுக்கக் கூடிய வகையில் இருக்கும் என்று கொள்ள முடியாது உள்ளது என இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

உலகத் தலைவர்கள்,ஐ. நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச ஸ்தாபனங்கள் இலங்கை விடயத்தில் மென்மையான போக்கை ஏன் கடைப் பிடிக்க வேண்டும்? என்று சாடி உள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.