இலங்கைக் கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் சோமதிலக திஸநாயக்க பதவியேற்றுள்ளார்.
இவர் இலங்கைக் கடற்படையின் 17வது தளபதியாவார். கடற்படையின் 16வது தளபதியாக இருந்த அட்மிரல் திசார சமரசிங்கவின் பதவிக்காலம் கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. அவரது சேவை நீடிப்பு முடிவடைந்ததை அடுத்தே புதிய தளபதியை நியமித்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.
ஓய்வுபெற்றுச் செல்வதற்கு மூன்று நாட்கள் முன்னதாக திசார சமரசிங்கவுக்கு அட்மிரல் பதவி உயர்வும் அளிக்கப்பட்டது.
இவர் அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்.
புதிய கடற்படைத் தளபதி சோமதிலக திஸநாயக்க 33 வருடங்கள் கடற்படையினல் பணியாற்றியுள்ளவர்.
புலிகளுக்கு எதிரான போரில் நீண்டகாலமாக ஈடுபட்டவர். முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
1995 ஏப்ரல் 19ம் திகதி மூன்றாவது கட்ட ஈழப்போரைத் தொடங்கி வைத்த திருகோணமலைக் கடற்படைத்தளம் மீதான புலிகளின் தாக்குதலில் இவர் மயிரிழையில் உயிர்தப்பியிருந்தார். கடற்கரும்புலிகளால் அழிக்கப்பட்ட “ரணசுறு” என்ற பீரங்கிப் படகின் கட்டளை அதிகாரியாக அப்போது பணியாற்றியிருந்தார் வைஸ் அட்மிரல் சோமதிலக திஸநாயக்க. இவர் தனது பணிக்காலத்தில் 30 இற்கும் அதிகமான புலிகளின் படகுகளை அழித்தவர் அல்லது கைப்பற்றியவர் என்றும் கடற்படைத் தலைமையகம் கூறுகிறது.
போரின் முக்கியமான காலகட்டங்களில் இலங்கைக் கடற்படையில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்தவர் என்பதால், இவரது பதவிக்காலத்தில் கடற்படையில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே அரசாங்கம் கடற்படையைப் பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இந்த ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினங்களில் கடற்படையைப் பலப்படுத்தும் திட்டத்துக்கு அதிகநிதி செலவிடப்படவுள்ளது. கடற்படையைப் பலப்படுத்திக் கொள்வதற்கான ஐந்தாண்டுத் திட்டம் ஒன்றைப் பாதுகாப்பு அமைச்சு தயாரித்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்த முன்னேற்ற அறிக்கை ஒன்றில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் கடல்சார் கண்காணிப்புத் திறனை அதிகரிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக கடல்கண்காணிப்பை அதிகரிக்கும் வகையில் கடல் வான் நிலையம் (Naval air station) ஒன்று உருவாக்கப்படும்.
விமானப்படையையும் இணைத்து இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
தற்போது கடற்படையின் ரோந்துப் படகுகளைக் கொண்டே கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானப்படையின் உதவியுடன் இந்த நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் இலங்கைக் கடற்படையின் கடல்சார் பாதுகாப்புத் திறன் மேலும் உயரும். அத்துடன் கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவு மேலும் விரிவாக்கப்பட்டுப் பலப்படுத்தப்படவுள்ளது.
கடற்படையின் சிறப்பு அணிகளான துரித நடவடிக்கைப் படைப்பிரிவும், சிறப்புக் கடற்படையணியும் பலப்படுத்தப்பட்டு அவற்றில் இரவு நேரக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும். புலனாய்வுத் தகவல்களைத் திரட்டிப் பகுப்பாய்வு செய்து கடற்படைத் தலைமையகத்துக்கும், ரோந்துக் கப்பல்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக தொடர்பாடல் வலையமைப்பை உருவாக்கவுள்ளது. இப்படிப் பல திட்டங்களைக் கொண்டிருக்கிறது கடற்படை.
கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றியது.
அதாவது அவர்களின் தொழில்நுட்பத்தையும் உத்திகளையும் கொண்டே அவர்களை அடிக்க உதவியிருந்தது. இந்தப் பிரிவு சிறிய மற்றும் நடுத்தர அதிவேகத் தாக்குதல் படகுகளை தயாரிக்கவுள்ளது. அதேவேளை, கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு அணியை புதிய இஸ்ரேலிய சுப்பர் டோறாக்களைக் கொண்டு பலப்படுத்தும் திட்டமும் உள்ளது.
ஆறு அதிவேகத் தாக்குதல் படகுகளை கடந்த ஆண்டில் இஸ்ரேலிடம் கடற்படை வாங்கியிருந்தது. அதில் இரண்டு படகுகள் தான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்றும், ஜுலையில் ஒன்றுமாக வந்து சேர்ந்துள்ளன. மேலும் நான்கு படகுகளை இந்த வருடம் கடற்படை எதிர்பார்த்துள்ளது. அதுமட்டுமன்றி கடற்படை தற்போது கடல்சார் வான் அச்சுறுத்தல்களை முறியடிக்க சீனத் தாயரிப்பு ரேடர்களைப் பெறவும் திட்டமிட்டுள்ளது.
வான் வழி ஊடுருவல்களை முறியடிக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளும் வகையில் சீனாவிடம் இருந்து Naval ரேடர்களை வாங்கவும் அது திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே புலிகளின் வான்படை அச்சுறுத்தலை முறியடிக்க விமானப்படை இந்தியா மற்றும் சீன ரேடர்களை வாங்கியிருந்தது. அவை தற்போது சில முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாகவே கடற்படையும் வான் தாக்குதல் முறியடிப்புக்கான ரேடர்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
கரையோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடற்படை ஏழு இடங்களில் உயர் தொழில்நுட்ப ரேடர்களைப் பொருத்தியுள்ளது. அத்துடன் ஆறு அதிவேக தாக்குதல் படகுகளில் இரவுப் பார்வை சாதனங்களுடன் கூடிய நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் கடற்படை “வேவ் ரைடர்”(Wave Rider ) ரகத்தைச் சேர்ந்த பத்துப் படகுகளை உற்பத்தி செய்தது. இவற்றை இப்போது வெளிநாடுகளுக்கு விற்பனையும் செய்யும் திட்டமும் அதற்கு உள்ளது. கடற்படைக்கான அடிப்படை வசதிகளை அதிகரிக்கவும் கடற்படையின் ஆளணி வளத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 2500 புதிய படையினரைச் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கடற்படைத் தளபதியின் கீழ் இலங்கை கடற்படையை மேலும் நவீனமயப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படவுள்ளது.
இலங்கையின் கடல்பகுதியை பாதுகாத்தல், வெளியில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களை முறியடித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் தான் கடற்படை இப்போது பலப்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் பாரிய கடல் பகுதியை தனக்குச் சொந்தமாகக் கொண்டுள்ளது. அதைப் பாதுகாப்பது என்பது முக்கியமானதோர் பிரச்சினை தான். அதற்காக இலங்கை தனக்கு வெளியே இருந்து ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அரிதாகவே உள்ள நிலையில் இவ்வாறு தயார்படுத்தல்களை மேற்கொள்வது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. ஏனென்றால் இந்தப் பிராந்தியத்தில் இலங்கைக்கு எதிரி நாடுகள் என்று எதுவும் கிடையாது. அதேவேளை அதற்குச் சவாலாக இருந்த கடற்புலிகளும் முறியடிக்கப்பட்டு விட்டனர்.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளான இந்தியாவோ, பாகிஸ்தானோ கூட போரைத் தொடுத்தாலும் அதைத் தாக்குப் பிடிக்கும் திறன் இலங்கைக்குக் கிடையாது. எனவே தான் கடல் பாதுகாப்பை அளவுக்கு அதிகமாக விரிவாக்கும் முயற்சிகள் தேவையற்றதொன்றாகவே கணிக்கப்படுகிறது. அதேவேளை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கை கடற்படை முக்கிமானதொன்று என்ற தோற்றப்பாட்டை சர்வதேச மட்டத்தில் உருவாக்கும் முயற்சிகளில் கடற்படை ஈடுபட்டுள்ளது.
அதற்காகவே அண்மையில் அது 60வது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியது. புலிகள் தோற்கடிக்கப்பட்டது பற்றிய கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. வெளிநாட்டு கடற்படையினருக்குப் பயிற்சியளிப்பது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டு கடற்படையினருடன் இணைந்து ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை யாவும் இலங்கைக் கடற்படையின் வலுவை அதிகரிப்பதற்கான முயற்சிகள். இதன் முதற்கட்டமாகச் சில வணிக முயற்சிகளையும் கடற்படை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது. அதாவது சிறிய ரகத் தாக்குதல் படகுகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்கும் தொழிலை கடற்படை மேற்கொள்ளவுள்ளது. கடற்புலிகளுடனான போரின் அனுபவங்கள் இதற்குக் கைகொடுத்துள்ளது.
கடற்படை தயாரித்து விற்கத் திட்டமிட்டுள்ள படகுகள் புலிகளின் தொழில்நுட்பத்தை அடியொற்றியவை என்பது ஆச்சரியம் தான். போரின் முடிவுக்குப் பின்னரும் கடற்படையைப் பலப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் கைவிடவில்லை என்பதால் பாதுகாப்புச் செலவினத்தை குறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றே தெரிகிறது.
- கட்டுரையாளர் சுபத்ரா இன்போதமிழ் குழுமம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.