உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் தற்போது வடக்கு கிழக்கு மாவட்டங்களில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றைய கட்சிகளுடனான தேர்தல் கூட்டணியை நிறைவு செய்துகொண்டு களத்தில் இறங்குவற்குத் தயாராகி வருவதாக கூட்டமைப்புடன் தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை மாவட்டத்தில் தாம் போட்டியிடும் பன்னிரெண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நிறுத்தவிருக்கும் வேட்பாளர் பட்டியல்களைப் பூர்த்தி செய்யும் நிலையை எட்டியிருப்பதாகக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் முன்னைநாள் பாராளுமன்றப் பிரதிநிதியுமான க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் இன்று புதன்கிழமை பூர்த்தி செய்யப்பட்டுவிடுமென்றும் இறுதி நாளான நாளை வியாழக்கிழமை காலை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுமென்றும் துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலை நகரசபை, கிண்ணியா நகரசபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, குச்சவெளி பிரதேசசபை, மொறவேவா பிரதேச சபை, தம்பலகமம் பிரதேசசபை, கந்தளாய் பிரதேசசபை, கிண்ணியா பிரதேச சபை, சேருவில பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை மற்றும் மூதூர்ப் பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகிறது.
வேட்பாளர் பட்டியல்களில் வேட்பாளர்களின் பெயர்கள் அகரவரிசையில் இடம்பெறும் என்றும் முதன்மை வேட்பாளர் என்று எவரும் முன்கூட்டியே அறிவிக்கப்படமாட்டார்கள் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, யாழ் மாவட்டத்திலும் வேட்பாளர் பட்டியல்களைப் பூர்த்தி செய்யும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. யாழ் மாவட்டத்தின் 17 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்த கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கூட்டமைப்புடன் இணைந்து சித்தார்த்தன் தலைமையிலான கட்சியும், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும் போட்டியிடவுள்ளன. கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர் பங்கீடுகள் ஓரளவிற்கு முடிவுக்கு வந்தள்ளதாகவே கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவருமான சிவாஜிலிங்கம் நவ சமசமாஜக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்த்தின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கூட்டமைப்புடன் இணக்கம் காணப்பட்டால் யாழ் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதை கைவிடுவோம் என்றும் திரு சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நவசமாஜக் கட்சியின் சார்பில் திருகோணமலை பிரதேசத்தில் இரு உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பால் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமலை மாவட்டத்தில், திங்கட்கிழமை மாலை வரை பத்து சுயேச்சைக் குழுக்கள் உதவித் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளன. கிண்ணியா நகரசபைக்கு 4 சுயேச்சைக் குழுக்களும் கிண்ணியா பிரதேச சபைக்கு ஒரு குழுவும் மூதூர் பிரதேசசபை, பதவி சிறிபுர பிரதேசசபை, வெருகல் பிரதேசசபை, திருமலை பிரதேசசபை, குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றிற்கு தலா ஒரு சுயேச்சைக் குழுவும் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.வடக்கு கிழக்கின் மற்றைய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களும் நாளை தாக்கல் செய்யப்படும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.