Tuesday, January 25, 2011

சரத் பொன்சேக்காவின் மருந்துகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய கோவையை தம்மிடம் வழங்குமாறு அனோமா பொன்சேக்கா கோரிக்கை:

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் உடல் நல குறைவை கவனத்தில் கொண்டு இராணுவ வைத்தியசாலையில் இருக்கும் அவருக்கு தேவையான மருந்துகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய கோவை தம்மிடம் வழங்குமாறு அனோமா பொன்சேக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற சேனக்க டி சில்வாவின் பிணை மனு மீதான விசாரணைகளின் பின்னர், சரத் பொன்சேக்காவின் உடல் நலம் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அனோமா பொன்சேக்கா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பொன்சேக்காவின் தலையிலும் குண்டு துகள் ஒன்று இருப்பதாகவும் அது அடிக்கடி இடமாறி வருவதால், அதனை குணப்படுத்த இராணுவ வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தை தமக்கு பெற்றுத் தருமாறு, தற்போது, பொன்சேக்காவுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தன்னிடம் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்டு வரும் மருந்து அவருக்கு தாங்கி கொள்ள முடியாத நிலைமையில் இருப்பதால், அவருக்கு முன்னர், வழங்கப்பட்ட மருந்தின் பெயரை அறிந்துக்கொள்ள இராணுவ வைத்தியசாலையிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.