Monday, January 17, 2011

கருணாநிதிக்கும் தம்பி பிரபாகரனுக்கும் தம்பி என்று இரட்டை வேடம் போடாதீர்

கருணாநிதிக்கும் தம்பி பிரபாகரனுக்கும் தம்பி என்று இரட்டைவேட அரசியல் நடாத்த வேண்டாமென தொல். திருமாவளவன், டாக்டர். ராமதாஸ் இருவரிடமும் தமிழருவி மணியன் கேட்டுக்கொண்டார். என்ன செய்யலாம் இதற்கு என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசியபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அரசியலுக்காக தமிழினத்தையே காட்டிக் கொடுத்த மு.கருணாநதியுடன் கூட்டு வைப்பது, பின் வெளியில் வந்து பிரபாகரனுக்கு நானே தம்பி என்று முழங்குவது போன்ற இரட்டைவேட அரசியலை நிறுத்துங்கள் என்று இருவரிடமும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஈழத்தில் நடந்த நிகழ்வுகளை பார்த்துவிட்டு வெறும் பத்து சீட்டுக்காக சோனியாவுடன் கூட்டு வைப்பதைப் போல தன்மானமிழந்த செயல் ஏதாவது உண்டா என்றும் வினவினார்.

பிரபாகரன் பெயரை சொல்லி பிழைப்பு நடத்திக் கொண்டு சோனியா – கருணாநிதியுடன் கூட்டு வைப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேட்டார். ஈழத் தமிழருக்காக முழங்கிவிட்டு சோனியாவுக்கு சாமரம் வீசுவது டாக்டர் ராமதாசுக்கு சரியாகப்படுகிறதா ? ஆளுக்கு ஒரு பேச்சு பேச இது ஒன்றும் கோமாளி மேடையல்ல என்றார்.

அன்று தாழ்த்தப்பட்டவருக்காக போராடிய அம்பேத்கர் காந்தியுடனேயே சமரசம் காண மறுத்தார். அப்படியிருக்க இந்த சோனியா காந்தியுடனா சமரசம் காணப்போகிறீர்கள்.. இதுதானா தலித்துக்கள் அம்பேத்கருக்கு செய்யும் மரியாதை என்றும் வினவினார். இவருடைய பேச்சுக்குப் பின்னர் கருணாநிதியை சந்தித்த தொல்.திருமாவளவன் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம் என்றார்.

1 comment:

  1. பிரபாகரன் என்பது தமிழரின் தன்மானத்திற்கான ஒரு குறியீடூ. திருமா,ராமதாஸ் போன்ற கேவல தமிழக அரசியல் வியாதிகளுக்கு அவர் எப்படி உறவாகலாம். இனியாவது எம் தங்கத் தலைவரின் பெயரை விற்று வயிறு வளர்க்காமல் இவர்கள் தங்களது அடிப்பொடி வேலைகளைச் செய்யட்டும். தமிழரை முட்டாளாக்க நினைக்கும் இவர்கள் நிச்சயமாய் அதற்கான பரிசைப் பெறுவர்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.