Wednesday, January 19, 2011

பிராட்வேயில் இன்று காலை துணிகரம்: தொழில் அதிபர் மகனை குத்தி ரூ.20 லட்சம்- 60 பவுன் நகை கொள்ளை; 4 பேர் கைவரிசை

சென்னை பிராட்வே தென் சேவியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் தொழில் அதிபர். இவர் வேலை நிமித்தமாக தஞ்சை சென்றுள்ளார். இன்று காலை 7 மணி அளவில் வீட்டில் கோவிந் தராஜின் மனைவிகள்- கலைச் செல்வி, சந்திரா, மகன் செல்வகுமார், மகள் ரேணுகாதேவி ஆகியோர் இருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஒன்று அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தது.

இதைப் பார்த்ததும் அவர்கள் பயத்தில் அலறினார்கள். உடனே அக்கும்பல் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் உள்ள பணம், நகை அத்தனையும் எடுத்து கொடுத்து விடுங்கள் இல்லா விட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினார்கள். இதில் பயந்து போன கலைச்செல்வி பீரோ சாவியை எடுத்து கொள் ளையர்களிடம் கொடுத்தார்.

அப்போது செல்வகுமார் சாவியை கொடுக்க விடாமல் தடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த அக்கும்பல் செல்வகுமாரை கத்தியால் 3 இடங்களில் குத்தினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதையடுத்து அக்கும்பல் பீரோவை திறந்து 60 பவுன் நகைகள் ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த செல்வகுமார் நுங்கம்பாக்கத் தில் உள்ள தனியார் மருத் துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி பூக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார் கள். துணை கமிஷனர் அறிவுச் செல்வன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. நெரிசல் மிகுந்த பிராட்வே பகுதியில் நடந்த இத்துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.