Sunday, December 12, 2010

நள்ளிரவிலும் தமிழர்கள் உலாவ முடிகின்றதாம் - நிருபாமாவின் கண்டுபிடிப்பு

இலங்கை தற்போது சரியான பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலளார் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் பின்னர் இலங்கை அரசாங்கம் சரியான திசை நோக்கி நகர்ந்து செயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இல்லாதொழிக்கப்பட்டதன் காரணமாக இலங்கைக்கு அரிய சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சகல மக்களும் சமாதானத்தின் நலன்களை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் இலங்கையில் தங்கியிருந்த போது மக்கள் நள்ளிரவிலும் சுதந்திரமாக நடமாடியதை கண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆக்கபூர்மான முறையில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பல துறைகளில் உறவுகள் வலுப்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.