Thursday, December 16, 2010

படுகாயமடைந்த சங்கானை முருகமூர்த்தி ஆலய பிரதமகுரு நேற்று மரணம்!

யாழில் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சங்கானை இலுப்பைத்தாழ் முருகமூர்த்தி ஆலயப் பிரதமகுரு நித்தியானந்தா குருக்கள் (வயது – 55) நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் முகமூடி அணிந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் குருவின் வீட்டினுள் புகுந்து அவரையும் அவரது இரு மகன் மாரையும் சுட்டும் வெட்டியும் காயப்படுத்தியதோடு, மோட்டார் சைக்கிளையும் இரண்டு மோதிரங்களையும் கைச்சங்கிலியையும் பறித்துவிட்டுத் தப்பிச்சென்றனர்.

இச்சம்பவத்தையடுத்த காயமடைந்த மூவரும் யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையிலேயே நேற்று முருகமூர்த்தி ஆலயப் பிரதமகுரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த பிரதம குருவின் மகன்மரான சிவானந்தசர்மா (வயது – 32), ஜெகானந்தசர்மா (வயது – 26) ஆகியோர் தொடர்ந்தும் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.