சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்கு குறித்து அமெரிக்கா திருப்தி கொண்டிருக்கின்றமையும், மீண்டும் போர் மூண்டமைக்கு நோர்வே காரணமல்ல என்கின்றமை குறித்தும் தான் மகிழ்ச்சி அடைவதாக சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக் சோல்ஹைம் ஆப்தன்போஸ்தன் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்கா சமாதான முயற்சியில் அதீத ஈடுபாடு காட்டியது. எனது நோக்கு நிலையில் வேறேதும் மறைமுக நோக்கங்கள் அற்ற, நேர்மையான ஈடுபாட்டினை அமெரிக்கா கொண்டிருந்தது என்றார்.சமாதான முயற்சி மிக நுணக்கமாகக் கையாளப்பட்டது. அமெரிக்காவின் சிறந்த ஒத்துழைப்பு இருந்தது.
நோர்வேயிடமிருந்து பெற்ற தகவல்களை அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்க மாட்டார்கள் என்பது எமக்குத் தெரியும். அதேபோல இந்தியாவும் எமக்கு சிறந்த ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது.சமாதான முன்னெடுப்பில் இரண்டு அடிப்படையான சவால்கள் இருந்தன.
ஒன்று சிறிலங்கா அரசாங்கக் கட்சிகளுக்கிடையிலான ஒத்துழையாமைச் சிக்கல். மற்றையது தமிழர்களுக்கான தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்கு பிரபாகரன் தயாராக இருந்தாரா என்பதாகும்.அவர் அதற்குத் தயாராக இருக்கவில்லை என்பதையே பல நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இவ்வாறு எரிக் சோல்ஹைம் ஆப்தன்போஸ்தன் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.