Wednesday, December 15, 2010

கிறிஸ்மஸ் தீவில் அகதிகள் கப்பல் விபத்து! பலர் பலி! - இலங்கையர்கள் இருந்திருக்கலாம் என சந்தேகம்

இலங்கையர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்தின் போது பலர் மரணமாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் கிறிஸ்மஸ் தீவில் உள்ள மலை ஒன்றில் மோதிய நிலையிலேயே கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் நீரில் மூழ்கிய போது அதில் 70 பேர் வரை இருந்துள்ளனர்.

இலங்கையர்கள் அதில் இருந்தார்களா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்தின் பின்னர் 40 பேர் கப்பலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில்; கடலில் மரணமான பெண்கள் மற்றும் சிறுவர்களின் சடலங்கள் காணப்படுவதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பு காரணமாகவே இந்த கப்பல் மலையில் மோதியதாக கிறிஸ்மஸ் தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.