நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) இம்மாதம் 31ம் திகதியுடன் திருமலையிலிருந்து வெளியேறவுள்ளது. திருமலையில் செயற்பட்டு வந்த யுனிசெப் அமைப்பின் பணிகள் அத்துடன் நிறைவு பெற்றுவிடும்.
யுத்தம் முடிவடைந்ததனைத் தொடர்ந்து உதவி வழங்கும் நாடுகள் தமது நிதியுதவிகளை நிறுத்திக் கொண்டதே யுனிசெப் திருமலையிலிருந்து வெளியேறக் காரணம் என்று தெரிய வருகின்றது.
அதன் காரணமாக இதுவரை யுனிசெப் நிதியுதவியில் செயற்பட்டு வந்த திருமலையின் பல செயற்பாடுகளும் நிதிவளமின்றி நிறுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.