Friday, November 19, 2010

லண்டனில் இருந்து சென்ற தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் கைது

லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அரச புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இது தொடர்பாக தகவல் வெளியிடுகையில்,

“பிரித்தானிய கடவுச்சீட்டை வைத்துள்ள கார்த்திகேசு திருலோகசுந்தர் [வயது 37] என்ற ஊடகவியலாளர் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுமையான சுகவீனமுற்றுள்ள தனது தாயாரை பார்ப்பதற்கான சிறிலங்கா சென்ற போதே நேற்று முன்தினம் புதன்கிழமை இவர் கைதுசெய்யப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அரச புலனாய்வுச் சேவையினரால் கைது செய்யப்பட்ட இவர் தற்போது அடையாளம் தெரியாத இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னர் தீபம் தொலைக்காட்சி, மற்றும் ஜிரிவி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

தற்போது லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முழுநேர ஊடகவியலாளாக பணியாற்றி வருகிறார்.“ என்று கூறியுள்ளது.

இவரது விடுதலைக்காக குரல் கொடுக்குமாறும் இந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.