கார்த்திகை மலராய் பூத்தாய் , கண்ணென எம்மைக் காத்தாய், போர்த்திறன் பொழியச் செய்தாய்,பொய்கையாய் குளிரச்செய்தாய்
கார்த்திகை மலராய் பூத்தாய்
கண்ணென எம்மைக் காத்தாய்
போர்த்திறன் பொழியச் செய்தாய்
பொய்கையாய் குளிரச்செய்தாய்
நேத்தியாய் யாவும் செய்த
நெஞ்கனே உன்னை கண்ணால்
பார்த்திடும் நாளே பொன் நாள்
பார்த்திடக் காண்பேன் அந் நாள்!
இருண்டதாய் வானம் என்றும்
இருந்ததே இல்லை: ஒன்று
திரணடெழும் முகில்கள் மழையாய்
பெய்வதே உண்மை கொஞ்சம்
பொறுத்திடும் காலம்.. பொறுப்போம்
பொறுமையும் மீறும் போதில்
இருக்கிறான் தலைவன்: அவனை
எதிர்த்திட எவனும் இருக்கான்!
சித்திரை நிலவே: எங்கள்
சித்திர வடிவே! மண்ணில்
எத்திசை நோக்கி உன்னை
எப்படி அடைவோம்? ஜயோ1
புத்தரின் சீடா; தம்மால்
பொசுங்குவதே பூமி பாராய்:
பத்தரை மாற்றுத் தங்கம்
பாய்ந்தொடி வாடா சிங்கம்
செம்மொழி வாழும்: வாழும்
செந்தமிழ் வீரம் வாழும்
நம் உயிர்த் தலைவன் வாழ்வான்
நற்றமிழ் ஈழம் ஆள்வான்
கும்மிருள் கலைவான்: தேசக்
கொடியுடன் நிமிர்வோம்: உண்மை!
ஏம்மினம் பெற்ற பேறே
உந்தனுக்கு ஆயுள் நூறே!
வன்னியில் இருந்து சீராளன்
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.