இலங்கையில் இதுவரைக்காலமும் தலைவிரித்தாடிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்த யுத்தம் என்பவற்றினால் இரு தரப்பிலும் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களுக்கும் கே.பியே பொறுப்பு கூறவேண்டும் என ஜனநாயக தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ளது.
ஆயுதம் நிதி மற்றும் சர்வதேச சமூகத்தினரை ஒன்றினைத்து விடுதலைப் புலிகளைச் சக்திமிக்க அமைப்பாக மாற்றிய பெருமை கே.பியையே சேரும் என ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இதுவரைக்காலும் பல்வேறு இடங்களிலும் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களுக்கும், மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் ஒவ்வொரு தோட்டா சப்தத்திற்கும் கே.பியின் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஆகவே இவ்வாறு பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் காரணமாக இருந்து கொடிய நபரைக் கைது செய்து ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவர் மீது எதுவிதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாமல், சுகபோகமாகவே வாழ வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர் மாநாட்டின் போது கூறியுள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.