Wednesday, July 07, 2010

தீருவில் ஞாபகார்த்த நினைவுப் பகுதியும் படையினரால் முற்றாக இடித்தழிப்பு

வல்வெட்டித் துறையில் உள்ள தீருவில் ஞாபகார்த்த நினைவுப் பகுதி நேற்று படையினரால் முற்றாக இடித்தழிக்கப்பட்டு உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்நகரில் இன்று நடத்திய ஊடக மகாநாட்டின் போதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டு இருந்தார்.

ஏற்கனவே சேதமாக்கப்பட்ட இந்தத் தூபிப் பகுதி தற்போது முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அழித்தொழிக்கப் பயன்படுத்திய படையினரின் கனரக வாகனங்கள் வல்வெட்டித்துறை முகாம் பகுதியில் தற்போது காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வன்னி மக்களின் மீள் குடியமரவென அரசாங்கம் வெறும் கண்கட்டு வித்தை காட்டுகின்றது. ஆனால் மக்கள் அனாதரவாக நாடோடிகளாக வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு வீதிகளில் விடப்படுகின்றனர். இதுதான் மீள் குடியமர்வென அரசு கூறுகின்றது. ஆனால் மறுபுறத்தே மில்லர் ஞாபகாரத்த தூபி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், தீருவில் ஞாபகார்த்த தூபி என நாள்தோறும் படையினர் இடீப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தமிழ் மக்களின் உயர்வுடன் தொடர்புடைய விடயம் ஆனாலும் இவ்வான நடவடிக்கைகளையே அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்கிறது. எனினும் இலங்கை மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாக இருப்பதாக சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசினுடைய இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குறிப்பாக காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோரின் பெயர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும், உயர் பாதுகாப்பு வலையம் தொடர்பான இறுதித் தீர்மானம் குறித்து அரசாங்கம் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக அரசாங்கம் அவற்றிற்கு த|Pர்க்கமான முடிவை வழங்காவிடின் குடாநாட்டில் உள்ள பலதரப்பினரையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுப்பதுடன் நாட்டின் பலபகுதிகளுக்கும் அதனை விஸ்தரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.