தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், இலங்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்ச சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைத்துள்ள நிபுணர் குழுவை கலைக்குமாறு கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் வெளிப்புறத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த விமல் வீரவன்ஸ, தான் இந்தப் போராட்டத்தின் போது உயிரிழந்தாலும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.