தமிழர்கள் மட்டும் பதிவு செய்யப்படும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.வெள்ளவத்தை பிரதேச தமிழர்கள் மட்டும் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்த வேண்டுமென மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர்களை மட்டும் பதிவுக்கு உட்படுத்துவதன் மூலம் இன ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படக் கூடுமென மனோ கணேசன் கடிதம் மூலமாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் முடிவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை மீறும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க பூரண உரிமை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நபர்கள் தொடர்பான பதிவுகளை புள்ளி விபரத் திணைக்களம் தொழில்சார் ரீதியில் நாகரீகமாக மேற்கொண்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.