Thursday, May 27, 2010

மீள்குடியேற்றம் குறித்து அரசிடம் விரைவில் அறிக்கை : மாவை சேனாதிராஜா

இடம்பெயர்ந்த மக்களின் காணிகளில் அரசாங்கம் இராணுவ முகாம்களை அமைத்து வருகின்றது. இந்நிலையில் அதன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எந்தளவு சாத்தியம் என்பதை விளக்குவது தொடர்பான அறிக்கை ஒன்றை அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மன்னார், முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பில் கேட்ட போதே எமது இணையத்தளத்திற்கு இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் காணி, நிலம், வாழ்வாதார நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள், கல்வி, போஷாக்கு தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்த வில்லை என்பதைத் தெளிவுபடுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் ஒரு சில தினங்களில் அரசாங்கத்திடம் மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.