உலகத் தொழிலாளர் நாளாம் மே 1ம் நாளை முன்னிட்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் அறிக்கை.அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களே !
எங்கள் தேசியத்தின் விடிவிற்காக இதுவரை காலமும் நீங்கள் ஆற்றிய பணி போற்றுதற்குரியது.
காலப்போக்கின் மாற்றத்தால் தமிழீழ விடுதலைக்கான உரிமைப் போரைத் தொடரும் கட்டாயத்தை வரலாறு உங்கள் தோள்களில் சுமத்தியுள்ளது. அதை இலக்கு நோக்கி நகர்த்த வேண்டியது உங்கள் கடப்பாடு ஆகும்.
இக் கடமைப்பாட்டை மேற்கொள்ளும்போது தற்போதைய உலக அரசியல் மாற்றத்தால் சிறு குழப்பநிலை தோன்றலாம். அதற்கு கலங்காது எமது தேசியத்தலைவரின் வழிகாட்டுதல்களைத் துணைகொண்டு தெளிவு பெறுங்கள். தெளிவுபெற்று உறவு, நட்பு, தனிமனித உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் தேசத்தின் விடிவு ஒன்றையே நோக்காக கொண்டு அனைத்து முயல்வுகளிலும் எண்ணித்தெளிந்து செயற்படுவோம், என்று உலகத்தொழிலாளர் தமது உரிமைகளை வென்றெடுத்த இன் நாளில் நாங்கள் உறுதியெடுத்துக்கொள்வோம்.
அத்துடன் இதுவரை காலமும் எவ்வாறு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அனைத்து நிகழ்வுகளையும் வழிநடத்தி வந்ததோ அவ்வாறே தனது பணிகளை ஓய்வு, தொய்வின்றி காலத்தின் தேவைகருதி கருமமாற்றும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு.
தலைவரின் சிந்தனை
'எந்தப்பலத்திலும் ஒருபலவீனம் இருக்கும். அதனைத் தேடிக்கண்டுபிடித்து, அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுரபலங்கொண்ட கோலியாத்தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்."






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.