Sunday, May 23, 2010

நாடு சமாதானத்தின் பயன்களை அறுவடை செய்கிறது என்கிறார் சட்டமா அதிபர்

GSP+ தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வற்காக சிறிலங்காவின் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக்குழு பெல்லியத்தின் தலைநகரான புருசெல்ஸில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஆணையாளரைச் சந்தித்து இக்குழு பேச்சுவார்;த்தைகளை நடத்தியுள்ளது.

திறைச்சேரியின் செயலாளர் கலாநிதி ஜெயசுந்தர, வெளிவிவகாரச் செயலாளர் றொமேஷ் ஜெயசிங்க, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் இத்தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

நிலையான சமாதானத்தை நோக்கிய பாதையில் நாடும் மக்களும் அதன் பயன்களை அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனர் என இச்சந்திப்பின்போது குறிப்பிட்ட சட்டமா அதிபர், போரின் பின்னான ஒரு வருட கால இடைவெளியில் தமது அரசு பல முன்னேற்றகரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவசரகாலச் சட்டத்தின் சில விதிகளைத் தளர்த்தியுள்ளதாகவும், சர்வதேச போர் நியமங்களுக்கு எதிரான சட்டமீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இவ்வருட முடிவிற்குள் தற்போது முகாம்களுக்குள் தங்கியுள்ள மக்கள் அனைவரும் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பி விடுவார்கள் என தான் நம்புவதாகவும் சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஆலோசகர் சிறிலங்காவிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.