Saturday, May 01, 2010

யுத்த வெற்றியின் ஓராண்டு பூர்த்தி கொண்டாட்டம் : கொழும்பு, காலிமுகத்திடலில் நடத்த ஏற்பாடாம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின் ஓராண்டு பூர்த்தியின் பிரதான வைபவத்தினை இம்மாதம் 20ஆம் திகதி காலி முகத்திடலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜி15 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ மீண்டும் நாடு திரும்பியதும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார் என்றும் தெ வித்த பாதுகாப்பு செயலாளர், இம்மாதம் 12ஆம் திகதி தல் 18வரையான ஒருவாரக் காலப்பகுதியினை இராணுவ வாரமாக பிரகட னப்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.

முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் சகிதம் வன்னிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அங்கு ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது

எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை போர் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகளுடனானபோரில் வெற்றியீட்டுவதற்காக பாடுபட்டு உயிர் நீத்த மற்றும் உயிருடன் வாழும் வீரர்களுக்காகவே இந்த ஒருவார காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் இறுதி வைபவம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிவகுப்பு நிகழ்வு கூட்டுப் படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்தும் பாராளுமன்றத் திடலில் அமைக்கப்பட்டுள்ள உயிழந்த இராணுவத்தினரின் நினைவுத் தூபியில் போரில் உயிழந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் நடைபெறவுள்ள ஜி15 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் போர் வெற்றியின் ஓராண்டு பூர்த்தியின் பிரதான வைபவங்களில் கலந்துகொள்வார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.