Thursday, May 27, 2010

இடம்பெயர் மக்களை 3 மாதத்துள் மீள்குடியேற்றுமாறு ஜனாதிபதி பணிப்பு

வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த சகலரையும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்றி வடக்கில் இருக்கின்ற சகல நிவாரணக் கிராமங்களையும் மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கில் வவுனியாவில் இடம்பெயர்ந்த 20 ஆயிரம் பேர் தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்றும் வவுனியா, வவுனியா வடக்கு, தெற்கு மற்றும் வெண்கலசெட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீளக்குடியேற்றப்படுவோருக்குத் தேவையான சகல வசதிகளையும் வடக்கின் வசந்தத்தின் கீழ் பெற்றுக் கொடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

"பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற வடக்கின் வசந்தத்தின் கீழ் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிவாரணத்தின் கீழ் வடக்கில் வீதிகள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல், இந்த மாகாணத்தில் 28 பாடசாலைகளை புதிதாக நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவில் இருக்கின்ற 12 பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள முகாம்களில் மீதமிருக்கின்ற 4,500 பேரை இலக்காகக் கொண்டு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அவர்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பிலான கலந்துரையாடல் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்தே, ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.