அராலி கடற்கரையில் அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று ,இன்று மதியம் கரையொதுங்கியுள்ளது.
நடுத்தர வயது மதிக்கத்தக்க மேற்படி சடலம் பிறிதொரு ,இடத்திலிருந்து அவ்விடத்திற்கு ஒதுங்கியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடற்கரையிலிருந்த சடலத்தை மீட்ட அராலிப் பொலிஸார் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.